Sunday, 23 February 2014

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பிப்.25-ல் உள்ளிருப்புப் போராட்டம்: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இணையதள தகவல் பணிக்குழு தலைவர் திரு.ரக்‌ஷித் கேள்விக்கணைகள்

Rakshith Kp 
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அன்பர்களுக்கு 


அன்றைய தினம் தாங்கள் பள்ளியில் கையொப்பம் இட்டு கற்பித்தல் பணியை புறக்கணித்து சும்மா இருக்கப்போவதாக உள்ளிருப்பு போராட்டதிற்கான விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்
அன்றைய தினம்
1.வகுப்புக்கு போகாமல் எங்கு அமர்ந்து இருப்பீர்கள்.

2.பள்ளியில் வகுப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள்.

3 தங்கள் பள்ளியினை பார்வையிட உயரலுவலர்கள் வந்தால் தங்கள் பதில் என்னவாக இருக்கும்.

4.அன்றைய தினம் பள்ளியில் இரு மாணவரிடையே ஏற்படும் சண்டைகள்,சச்சரவுகளை தீர்ப்பீர்களா அல்லது அவர்கள் அடித்துக்கொள்ளட்டும் என வேடிக்கை பார்ப்பீர்களா.

5.தங்கள் பிள்ளைகள் குறித்து வகுப்பாசிரியர் என்ற முறையில் தங்களிடம் வந்து தகவல் கோரும் பெற்றோரிடம் தங்களின் பதில் என்னவாக இருக்கும்.பதிலுரைப்பீர்களா அல்லது இன்று போராட்டம் நாளைவா பதில் சொல்லுகிறேன் என்று கூறுவீர்களா.

6. அவசர புள்ளிவிவரம் கோரும் அதிகாரிகளிடம் நான் உள்ளிருப்பு போராட்டத்தில் உள்ளேன் நாளை பதில்தருகிறேன் என தலைமைஆசிரியர்களின் பதில் வருமா?

7.பள்ளி சார்ந்த தகவல் குறித்து வரும் பார்வையாளரிடம் தாங்கள் கூறும் பதில் என்னாவாக் இருக்கும்.

8 சில இடங்களில்மூன்று நாள் பள்ளி மேலான்மைக்குழு பயிற்சியில் செல்வோர் மூன்றாம் நாள் பயிற்சியில் கலந்துகொண்டு என்ன செய்யப்போகீரீர்

9.அன்ரைய தினம் பள்ளிக்கு வரும் DEEO.CEO,AEEO.BRT போன்ற அலுவலர்கள் பார்வையிட்டு பதிவு செய்ய ஆய்வுக்குறிப்பேடு கேட்டால் எடுத்து தருவீர்களா இல்லையா.

இதெல்லாம் செய்து கொண்டே நான் உள்ளிருப்பு உள்ளிருப்பு போராட்டம் என்றால் அது சரியா?

இன்னும் கேள்விகள் ஏராளம்?
விடை கூறுவோர் யோசிப்பீர்................... 

No comments:

Post a Comment