Tuesday, 25 February 2014

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வெண்மணி நினைவாலயத்திற்கு ரூ.3 லட்சம் நிதியளிப்பு நாகை பொதுக்கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன், எம்.பி. பங்கேற்பு


தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் சார்பில், வெண்மணி நினைவாலயத்திற்காக ரூ.3 லட்சம் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் நாகை அவுரித்திடலில் ஞாயிறு முன்னிரவில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினரும் சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவருமான டி.கே.ரங்கராஜன்,எம்.பி. நிதியைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
நாகைமாலி,எம்.எல்.ஏ. மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.நிதியளிப்புப் பொதுக்கூட்டத்திற்குத் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிமாநிலத் தலைவர் தி.கண்ணன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் செ.பாலச்சந்தர் வரவேற்புரையாற்றினார்.தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் அசோக்குமார், தமிழ்நாடுமுதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஞானசேகரன், இந்தியப் பள்ளிகளின் கூட்டமைப்பின் அகில இந்தியத் துணைத் தலைவர் தா.கணேசன், இந்தியப் பள்ளிகளின் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் கே.ராஜேந்திரன், தமிழ்நாடு மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.விஜயகுமார், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் க.இசக்கியப்பன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சு.சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி சிறப்புரையாற்றும்போது, கீழத் தஞ்சை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகப் போராடி, செங்கொடி இயக்கத்தை வளர்த்தபி.சீனிவாசராவின் தொண்டுகளையும் வெண்மணி வீரர்களின் தியாகத்தையும் நினைவுகூர்ந்து உரையாற்றினார்.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் சார்பில் வெண்மணி நினைவாலய நிதியாக ரூ.3 லட்சம் நிதியைக் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் ச.மோசஸ் மற்றும் மாநிலத் தலைவர் தி.கண்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் செ.பாலச்சந்தர் ஆகியோர் இணைந்து சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. இடம் வழங்கினர்

No comments:

Post a Comment