ஏழாவது சம்பள கமிஷனின் தலைவராக, சுப்ரீம் கோர்ட், முன்னாள் நீதிபதி, மாத்தூர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று ஒப்புதல் அளித்தார். பெட்ரோலியத் துறை செயலர் விவேக் ராய், ரத்தின் ராய், மீனா அகர்வால் ஆகியோர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த கமிஷன், நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான பரிந்துரைகளை, இரண்டு ஆண்டுகளுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும். இந்த பரிந்துரைகள், 2016 ஆண்டு முதல், நடைமுறைப்படுத்தப்படும். இதற்கும், பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment