Saturday, 22 February 2014

அரசுத் துறை பணியாளர்களுக்கென நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் போட்டியே இல்லாமல் வெற்றி!

அரசுத் துறை பணியாளர்களுக்கென நடத்தப்பட்ட பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் போட்டியே இல்லாமல் வீரர்கள் வெற்றிபெற்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(கோவை மாவட்டப் பிரிவு) சார்பில் 'அரசுத் துறை பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் 2013-14' நேற்று நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அளவில் நடந்த இப்போட்டியில், பொதுப்பணித் துறை, கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த 30 வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இதில், 100 மீ., 200 மீ., 800 மீ., 1500 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4*100 தொடர் ஓட்டம் உள்ளிட்ட எட்டு போட்டிகள் வீரர், வீராங்கனைகளுக்கென தனித்தனியே இடம்பெற்றன. பெண்களுக்கான 100 மீ., 200 மீ., ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் தலா ஒரே ஒரு வீராங்கனை மட்டும் பங்கேற்றனர்; போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
இப்போட்டியில் மொத்தம் மூன்று பெண் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர் என்பது வேதனையளிக்கும் விஷயம்.
ஆண்களுக்கென நடத்தப்பட்ட 200 மீ., 800 மீ., 1500 மீ., ஓட்டப் போட்டிகளில் ஒவ்வொன்றிலும் மூன்று வீரர்கள் மட்டுமே பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். நீளம் தாண்டுதலில் இருவரும், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் தலா நான்கு வீரர்களும் பங்கேற்றனர். 4*100 மீ., தொடர் ஓட்டத்தில் கல்வித் துறை முதலிடமும், பொதுப் பணித்துறை இரண்டாமிடமும் பிடித்தது.எனவே, பெரும்பாலான போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் போட்டியே இல்லாமல் வெற்றிபெற்றுள்ளனர். இதனால், விளையாட்டின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டேன்லி மேத்யூவிடம் கேட்டபோது,தேர்தல் பணி, மாநகராட்சி பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் அரசுத் துறை பணியாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இப்போட்டியில் பங்கேற்றனர். குறித்த தேதியில் நடத்த வேண்டும் என்பதால், போட்டியை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது,'' என்றார்.

No comments:

Post a Comment