Sunday, 2 February 2014

தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது

தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது என்று மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம். ஆறுமுகம் (வால்பாறை) பேசியது: 24 மணி நேரமும் மின்சாரம் இருந்தால் கோவையில் தொழில்கள் வளர்ச்சி அடையும்.
தொழிலதிபர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்ல மாட்டார்கள்.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு இப்போது இல்லை. முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளினால் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 12,799 மெகாவாட் மின் உற்பத்தி செய்து மின்வாரியம் சாதனை படைத்துள்ளது. எனவே, இனி தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்றார்.

No comments:

Post a Comment