Thursday, 20 February 2014

டிட்டோஜாக் பொறுப்பாளர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குனர் சந்திப்பு, கோரிக்கை குறித்து முடிவு எட்டப்படாததால் பொறுப்பாளர்கள் சென்னையில் முகாம்

இன்று காலை தொடக்கக் கல்வி இயக்குனருடன் டிட்டோஜாக் மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது 7அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், அப்பொழுது இயக்குனர் போராட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தார். ஆனால் சங்க பொறுப்பாளர்கள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் நிதித்துறை செயலர் ஆகியோருடன் பேசி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து இன்று மாலைக்குள் அறிவிப்பதாக கூறியுள்ளார். தொடக்கக்கல்வி இயக்குனரின் அடுத்த அறிவிப்புகாக டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment