Saturday 22 February 2014

திருச்சி கே.கே.நகர் ஆல்பா கல்வி குழுமத்தில் ஐஸோன் கல்வி அறிமுகம்: பள்ளிக்கல்வி இயக்குனர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு


திருச்சி கே.கே நகரில் உள்ள ஆல்பா கல்வி குழுமம் ஐஸோன் என்ற புதிய கல்வி முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. ஐஸோன் என்பது தரமான நுண்ணியல் தொழில்நுட்ப கல்வி முறையாகும். ஒவ்வொரு மாணவரின் தேவையையும், திறமைகளையும் பூர்த்தி செய்ய அவரவர் கல்வி நிலைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட புதிய முறையாகும். 
இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்த உள்ள ஐஸோன் கல்விமுறையில் பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடங்கள் அனைத்தும் மின்னணு பலகை எனப்படும் டேப்லெட்டில் பதிவு செய்யப்படுவதோடு, பாடங்கள் தொடர்பான படக்காட்சிகள் மற்றும் குறிப்புகளும் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கும். மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் பாடக்குறிப்புகளை பள்ளியிலிருந்து  வீட்டிற்கு எளிதாக எடுத்துச்செல்ல முடியும். அதிகப்படியான புத்தக சுமையை குறைக்க இந்த முறை பெரிதும் உதவுகிறது. டேப்லெட்டில் குழந்தைகள்  தொழில்நுட்ப இயக்கங்களையும், நுணுக்களையும் எளிதாக கற்க முடியும். நாளை மாலை 6 மணிக்கு ஆல்பா கல்விகுழுமத்தின் ஆண்டுவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் அல்போசா என்ற பெயரில் ஆல்பாவின் பழைய மாணவர் அமைப்பும் துவக்கப்பட உள்ளது. விழாவிற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஷ்வரன், நடிகர் சூர்யா, திரைப்பட இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.  ஐஸோன் தொழில்நுட்ப ஆக்க கல்வியை நடிகர் சூர்யா தொடங்கி வைக்கிறார். பின்னர் ஆல்பாவின் சாதனையாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். பின்னர் மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.  நிகழ்ச்சியில் ஆல்பா பள்ளி குழும தலைவர் டாக்டா பழநி, பள்ளியின் செயலாளர் சுகுணலதா, இணை இயக்குநர் சிவபிராசாத் மற்றும் ஆல்பா குழுமத்தின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கல்வி இணை இயக்குனர் மதுரபிசாத் பாண்டே, துணை இயக்குனர் டாக்டர் ஜான், முதன்மை கற்பித்தல் அதிகாரி பிரிசில்லா ராணி ஆகியோர் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment