திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கலாம் என்று கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் கூறி உள்ளார்.
இது குறித்து கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
வாக்காளர் பட்டியல்
திருச்சி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 10.01.2014 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, 10 லட்சத்து 5 ஆயிரத்து 621 ஆண்களும், 10 லட்சத்து 27 ஆயிரத்து 480 பெண்களும், 87 இதர வாக்காளர்கள் என மொத்தம் 20 லட்சத்து 33 ஆயிரத்து 188 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 18-லிருந்து 19-வயது வரை உள்ளவர்கள் மொத்தம் 90 ஆயிரத்து 703 பேர் ஆவர். இதில் 50.75 சதவீதம் பேர் மட்டுமே, அதாவது, 46 ஆயிரத்து 38 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
பெயர் சேர்க்கலாம்
அதேபோல் 20-லிருந்து 29-வயது வரை உள்ள 4 லட்சத்து 75 ஆயிரத்து 705 பேரில் 79.34 சதவீதத்தினர் மட்டுமே, அதாவது 3 லட்சத்து 7 ஆயிரத்து 564 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும் விடுபட்டுள்ளவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்பணி தேர்தல் அட்டவணை வெளியிடும் வரை தொடர்ந்து நடைபெறும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத தகுதியுள்ள அனைத்து நபர்களும் மாநகராட்சி, கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் நேரடியாகவும் இணையதள முகவரியிலும் விண்ணப்பித்து தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment