Wednesday, 26 February 2014

மாவட்டம் முழுவதும் ஆசிரியர்கள் நேற்று உள்ளிருப்பு இன்று வேலை நிறுத்தம்மாணவர்கள் பாதிப்பு


தமிழகத்தில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி சார்பில் நேற்று உள்ளிருப்பு போரா ட்டம் நடத்தப்பட் டது. இதில் திருச்சி மாவட்டத் தில் 2,500 பேர் உள்பட தமி ழகம் முழுவதும் 59,600 ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர்.
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணை யான ஊதியத்தை இடை நிலை ஆசிரியருக்கும் வழங்க வேண்டும். பங் கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விடப்பட் டது. இது குறித்து கடந்த வாரம் பள்ளிக் கல்வி முதன்மை செயலாளர் ஆசிரியர் கூட் டணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது கோரிக்கைகளை நிறை வேற்ற அரசு தரப்பில் கால அவ காசம் கேட்கப்பட் டது. இதற்கு 2009ம் ஆண்டு முதல் போராட் டம் நடத்தப்பட்டு வருவ தால் கால அவகாசம் வழங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டம் மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தை ஆசிரியர் கூட்டணியினர் அறிவித்தனர். 
அதன்படி தமிழகம் முழுவதும் ஆசிரியர் கூட்டணியினர் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் 59,600 ஆசிரிய, ஆசிரியைகள் கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிக ளில் உள்ளிருப்பு போராட் டம் நடத்தினர். திருச்சி மாவட்டத்தில் உள்ள 16 ஒன்றியங்களில் 1,300 பள்ளிகளில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியைச் சேர்ந்த 2,500 ஆசிரியர்கள் கோரி க்கை அட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். 
இதனால் பாடம் கற்பிக்கும் பணி பாதிக்கப்பட் டது. இதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், திட்டமிட்டபடி உள்ளிருப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. நாளை (இன்று) பணிக்கு செல்லா மல் வேலை நிறுத்த போரா ட்டம் நடத்தப்படும்.  போராட்டத்தை ஒடுக்கும் விதமாக அரசு மாற்று ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது என்றார். ஆசிரியர்களின் இந்த போராட்டத்தால் பள்ளிக ளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பணி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment