திருச்சி ராம லிங்க நகர், அதவத்தூரில் உள்ள சிவானந்தா பாலா லயா பள்ளிகளின் வளாகங்களில் இன்று நவீன குரு குலம் என்ற, மாணவர்களே மாணவர்களுக்கு பாடம் நடத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மரத்தடி கல்வி முதல் வகுப்பறை கல்வி வரை பாடம் நடத்திட ஆசிரியர்களே பிரதானமாக உள்ளனர். இந்த நவீன குருகுலத்தில் மாணவர்களே மாணவர்களுக்கு பாடம் நடத்த உள்ளனர்.
இந்த முயற்சியின் மூலம் சிந்தனை, திட்டமிடுதல், ஒருங்கிணைப்பு, கற்பிப்பு ஆகிய திறன்களை மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே பெறுகின்றனர். இந்த திட்டத்தில் 7,8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் தங் களை ஈடுபடுத்திக்கொண்டு குரு-சிஷ்யர் உறவு முறையை பலப்படுத்த உள்ளனர். எண்ணற்ற கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், மடிக்கணினி உபயோகித்தல், வகுப்பறை அலங்காரம், மாணவர்கள் விரும்பும் விளையாட்டுகள் ஆகியவை தொடர்பான கண்காட்சியும் நடைபெறவுள்ளது. இந்த நவீன குருகுல முயற்சியிலும், கண்காட்சியிலும் 150 மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் மாணவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும் என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.
No comments:
Post a Comment