திருநெல்வேலி அருகே மாணவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி, மானூரை அடுத்த கானார்பட்டி, புனித யோவான் நடுநிலைப்பள்ளியின் 5 ம் வகுப்பு ஆசிரியர் வில்சன், 48. மேலப்பாளையத்தை சேர்ந்த இவர், தனது வகுப்பு மாணவர்கள் இருவரை, தகாத உறவில் ஈடுபடுத்தியுள்ளார். இதுகுறித்து மாணவரின் தந்தை விக்டர் அளித்த புகாரின் பேரில்,மானூர் போலீசார், ஆசிரியர் வில்சனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே பணியாற்றிய பள்ளியிலும், இதேபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
No comments:
Post a Comment