Thursday, 20 February 2014

தமிழ அரசில் பணிபுரியும் அலுவலர்களுக்கென்று பிரத்யோகமாக மாநில ஊதியக் குழு அமைக்கப்படவேண்டும்: அரசு அலுவலர் ஒன்றியத்தினர் உண்ணாவிரதம்

தமிழ அரசில் பணிபுரியும் அலுவலர்களுக்கென்று பிரத்யோகமாக மாநில ஊதியக் குழு அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தி திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தினர் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த உண்ணாவிரதத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர்கள் வெ.நாகராஜன், த.கலியமூர்த்தி, ப. சிவகுமரன், எம்.மருதாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில இணைச் செயலர் கு.சக்கரபாணி பங்கேற்று பேசினர்.
2004-க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர்-ஆசிரியர்களுக்கு செயல்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்தவேண்டும். தமிழக அரசில் பணிபுரியும் அரசு  அலுவலர்- ஆசிரியர்களுக்கு தொழில் வரி ரத்து செய்யவேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1,50 லட்சத்திலிருந்து ரூ. 5, லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு, ஒரு நபர்க்குழு,ஊதிய சீரமைப்புக்குழு ஆகியவற்றில் புறக்கணிக்கப்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள், களப்பணியாளர்கள், சார்நிலைப்பணியாளர்கள் ஆகியோரின் ஊதிய முரண்பாடுகளை களைந்திடல் வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment