Friday, 28 February 2014

காலி பணியிடங்களால் கல்வி தரம் பாதிப்பு


மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில், பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வித் தரம், பாதிக்கப்படும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 9 அரசு சிறப்பு பள்ளிகள்; வாய்பேச முடியாத, காது கேளாதோருக்கான, 9 சிறப்பு பள்ளிகள்; கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, ஒரு சிறப்பு பள்ளி; மனவளர்ச்சி குன்றியோருக்கு, ஒரு சிறப்பு பள்ளி என, மொத்தம், 20 சிறப்பு பள்ளிகள் உள்ளன. இவற்றில், 150 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், மூன்று ஆண்டுகளாக, காலியாக உள்ளன. ஆசிரியர் அல்லாத அலுவலக பணியாளர் உள்ளிட்ட, 120 பணியிடங்களும், காலியாக உள்ளன. குறிப்பாக, சென்னை, பூந்தமல்லி அரசு சிறப்பு பள்ளியில் மட்டும், 16 சிறப்பாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பூந்தமல்லியில் உள்ள, பார்வையற்றோருக்கான வட்டார பிரெய்லி அச்சகத்தில், 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மூன்று ஆண்டுகளாக, அச்சகம் செயல்படுவதில் சிக்கல் உள்ளது. பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்களை, தயாரிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர், தங்கம் கூறுகையில், ""இப்பிரச்னையால், மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி மட்டுமின்றி, எதிர்காலமும் பாதிக்கப்படும் நிலை, உள்ளது. எனவே, தமிழக அரசு, காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment