Monday, 24 February 2014

மாநில மாநாட்டில் தீர்மானம்: சத்துணவு ஊழியர்களையும் அரசு ஊழியராக்க வேண்டும்


சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 12வது மாநில மாநாடு கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநாட்டில், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி, ஊதியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியமும்,  ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.3,500 ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.

உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வு வழங்க வேண்டும். சமையலர் மற்றும் அமைப்பா ளர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள பணிகால நிபந்தனையை ரத்து செய்து, கல்வி தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் பணிநீக்க காலத்தை, பணி காலமாக அறிவித்து ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment