Sunday, 2 March 2014

0, பிளஸ் டூ பொதுத் தேர்வு மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை:திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ அறிவிப்பு


தேர்வு எழுதும் மாற் றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை கள் வழங்கப்பட உள்ளதாக கலெக் டர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில்  3ம் தேதி முதல் 25ம் தேதி வரை மேல்நிலை வகுப்புகளுக்கான (+2) பொதுத் தேர்வுகளும், 26ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளும் நடைபெற உள் ளன. இத்தேர்வுகளை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட தேர்வுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது : 
பொதுத் தேர்வுகளில் கண்பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், மாற்று திறனாளி கள், டிஸ்லெக்சியா குறைபாடுடை யோர், மனநலம் குன்றியோர் மற்றும் நரம்பியல் கோளாரினால் பாதிக்கப்பட்ட தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. 
ஏற்கனவே பள்ளிகள் மூலமாக இச்சலுகைகளை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்கள் நீங்கலாக விடுபட்டவர்கள் எவரேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவிகள் பெற்றோர்ருடன் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களையோ, மாவட்டக் கல்வி அலுவலகத்தையோ அல்லது முதன்மைக் கல்வி அலுவலகத்தையோ உடனடியாக தொடர்பு கொண்டு அரசால் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.    
இக்கூட்டத்தில் மருத்துவதுறை இணை இயக்குநர் மனோகரன், முதன்மைக் கல்விஅலுவலர் செல்வக்குமார்,  மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் உள்படபலர் கலந்து கொண்டனர். அந்த பயன்பாட்டிற்கு மட்டும் உபயோகப்படுத்தி மின்விதிமீறலை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு செயற்பொறியாளர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment