Saturday, 1 March 2014

தொடக்கக்கல்வித்துறையில் முதலில் 1.1.2013ன் படி பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இயக்குனரிடம் திரு.செ.முத்துசாமி வலியுறுத்தல்

இன்று மாலை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்கள் தொடர்பு கொண்டு 2013-14ம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வின் நிலை பற்றி கேட்டறிந்தார். அப்பொழுது இயக்குனர் அவர்கள் கலந்தாய்வு நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்தார். அவற்றில் ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் முதலில் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் வழங்கிவிட்டு பின்பு பதவி உயர்வு நடத்துங்கள் என்று வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

இல்லையெனில் வழக்கிற்கு செல்வதாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒரு தரப்பினர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி விட்டு மாறுதல் வழங்குங்கள் என வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து காலிப் பணியிடங்கள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்த நிலையில் மாறூதல் வழங்கினால் காலிப்பணியிடங்கள் நிலை மாறும் என்றும், இதனால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதால், அரசின்  தெளிவுரை ஆணை வேண்டி அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அரசின் ஆணை கிடைத்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இயக்குனர் உறுதியளித்ததாக திரு.முத்துசாமி தெரிவித்தார். மேலும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் கலந்தாய்வு நடத்தும் போது முதலில் 01.01.2013ம் முன்னுரிமைப் பட்டியல் அடிப்படையில் தான் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக அதற்கு இயக்குனர் இசைவு தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment