Tuesday, 25 March 2014

குரூப்-4 பணிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது


குரூப்-4 பணிகளுக்கான கலந்தாய்வு சென்னையில் திங்கள் கிழமை தொடங்கியது.

தமிழக அரசு பணியில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவி களில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதிய இந்த தேர்வின் முடிவு மார்ச் 5-ம் தேதி வெளியானது.

தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்த 12 லட்சம் பேரின் மதிப்பெண் அடங்கிய ரேங்க் பட்டியலையும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிட்டது. அதோடு காலியிடங் களின் எண்ணிக்கை 5,853 ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்கட் டமாக, இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர் ஆகிய பதவிகளுக்கான கலந்தாய்வு-சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டு கலந்தாய்வு மார்ச் 24-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் திங்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. மே 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வில் 6 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment