Thursday, 27 March 2014

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; தமிழில் 978 பேர் 'ஆப்சென்ட்'

மதுரை மாவட்டத்தில், நேற்று துவங்கிய பத்தாம் வகுப்பு தமிழ்த் தேர்வில், 978 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆயினர்.மாவட்டத்தில், 121 மையங்களில், 450 பள்ளிகளை சேர்ந்த 47,030 மாணவர்களுக்கு (மாணவர்கள் 24,749; மாணவிகள் 22,281) 'ஹால்டிக்கெட்' வழங்கப்பட்டன. இதில், 46,052 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். 978 (மாணவர்கள் 670, மாணவிகள் 308) பேர் தேர்விற்கு வரவில்லை.முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமையில், பறக்கும் படையை சேர்ந்த 232 ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் தேர்வுப் பணிகளை கண்காணித்தனர்."தமிழ்த் தேர்வு மிக எளிதாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண் பெற முடியும்," என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment