சென்னை செனாய்நகர் மாநகராட்சி கலை அரங்கில் வாக்குசாவடி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட எழும்பூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, துறைமுகம், அண்ணாநகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குசாவடி தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் தயாளன், உதவி ஆணையர் இளங்கோவன், வரி மதிப்பீட்டாளர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த கூட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்காக முதலில் புகைப்படம் எடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை எவ்வாறு வினியோகிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment