வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் வேலைநேரத்தை, குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், கோடை காரணமாக, நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல இடங்களில், நிலத்தடி நீர்மட்டம் காணாமல் போய் விட்டதால், தண்ணீர் பஞ்சமும் தலைதூக்கி வருகிறது. இந்நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது.
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 220 நாட்கள் வேலைநாட்களாக அரசாணை உள்ளதால், ஏப்ரல் மாதம், 30ம் தேதி வரை பள்ளிகள் செயல்பட வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வின் நேரத்தை, வெயில் காரணமாக மாற்றியுள்ள நிலையில், துவக்கப்பள்ளி செயல்படும் நேரத்தையும் மாற்றியமைக்க வேண்டும், என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், மாணவர்கள் பல அவதிகளுக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான துவக்கப்பள்ளிகளில் மின் விசிறி மற்றும் மின்சாரம் உள்ளிட்டவை இருப்பதில்லை. இதனால், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் வேலை நேரத்தை காலை, 8.30 மணி முதல் மதியம், 1 மணி வரையாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், முன்னதாகவே தேர்வு நடத்தி அனைத்து பள்ளிகளை போலவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விடுமுறை அளிக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நேரக்குறைப்பிற்கான முயற்சிகளில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு செ முத்துசாமி அவர்கள் தொடர் முயற்சிகள் எடுத்து வருகிறார்.அவரது முயற்சிக்கு அனைவரும் உறுதுணை புரிய வேண்டுகிறோம்
ReplyDelete