Thursday, 20 March 2014

ஜப்பான் செல்லும் மகனை வழியனுப்பி விட்டு திரும்பிய உதவி தொடக்கக்கல்வி அதிகாரி லாரி மோதி பலி


ஜப்பான் செல்லும் மகனை வழியனுப்பி விட்டு, டூவீலரில் திரும்பிய கல்வி அதிகாரி, லாரி மோதி பலியானார். ராமநாதபுரம் மாவட்டம் மேல்முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் சூசைதாஸ், 54. அங்கு உதவி தொடக்கக்கல்வி அதிகாரியாக இருந்தார். இவரது மகன் அருண்ராகுல், ஜப்பான் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று காலை இருவரும், டூவீலரில் மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். ஹெல்மெட் அணியவில்லை. ஜப்பான் செல்லும் மகனை வழியனுப்பி விட்டு, ரிங் ரோடு வழியாக ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். விரகனூர் சந்திப்பு அருகே, கண்டெய்னர் லாரி மோதியதில், பின்தலையில் அடிபட்டு சூசைதாஸ் இறந்தார். போலீசார், அவரது மொபைல் போனை ஆய்வு செய்தபோது, கடைசியாக மகனுக்கு பேசியது தெரிந்தது. இதுகுறித்து விமானத்தில் ஏற காத்திருந்த அருண் ராகுலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர், பயணத்தை ரத்து செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து, அடையாளம் காட்டினார். லாரியுடன் தப்பிய டிரைவரை சிலைமான் போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment