Friday, 21 March 2014

TRB PG TAMIL பி வரிசை கருணை மதிப்பெண்: நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?

முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக கருணைமதிப்பெண் வழங்க நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?


நீதிமன்றத்தை நாட TRB முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது.
பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக 60 க்கும் மேற்பட்ட தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தவாறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க நீதிமன்றத்தின் ஆணை பெற்றுள்ளதாக தெரிகின்றது. இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் அதன்மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் TRB அந்த நீதிமன்ற ஆணைகளை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அம்மனுக்கள் மீண்டும் நீதியரசர் சுப்பையா விசாரிப்பார். தற்போது மதுரை பெஞ்சில் உள்ள நீதியரசர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் நாளில் விசாரணை நடைபெறக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment