பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதுபோல், பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கும் விடைத்தாள் நகல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்களில் சிலர், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்பது வழக்கம். பிளஸ் 2 விடைத்தாள் நகல்களை தங்கள் வசம் பத்திரப்படுத்தும் நோக்கத்தில், ஆண்டுதோறும் பல ஆயிரம் மாணவர்கள், அரசு தேர்வுகள் இயக்கத்துக்கு விண்ணப்பித்து, அவற்றை பெறுகின்றனர். தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விடைத்தாள் நகல்களை காட்டி மகிழ்ச்சி அடைகின்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கவும், விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யவும், அரசு தேர்வுகள் இயக்ககம், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,"பள்ளி வாழ்க்கையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு, முக்கிய திருப்புமுனையாக அமைகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதுபோல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்குவதில் சிரமம் ஏதுமில்லை. கல்வித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்தால், அரசு தரப்பில் அனுமதிக்க வாய்ப்புள்ளது,' என்றார்.
correct
ReplyDeleteit is a necessary article in this time.....................
do dse will take any necessary steps???????