Thursday, 17 April 2014

தேர்தல் அலுவர்களுக்கு, பணி ஒதுக்கீடு :22 அல்லது, 23ம் தேதி தான், எந்த ஓட்டுச்சாவடியில் பணி என்பது தெரியவரும்


தமிழகத்தில், அனைத்து லோக்சபா தொகுதிக்கும், மத்திய பொது பார்வையாளர், ஓட்டுச்சாவடியில்பணியாற்றும் அலுவர்களுக்கு, பணி ஒதுக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக, அந்தந்த மாவட்ட தேர்தல்நடத்தும் அலுவலர் முன்னிலையில், சட்டசபை தொகுதி வாரியாக பட்டியல்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அடுத்தாக, எந்தஊர் என்ற விபரம், தேர்தலுக்கு ஒரு சில நாள் முன்னதாக தான் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களின் பட்டியலில், நேற்று முன்தினம், எந்த சட்டசபை தொகுதியில், அவருக்கு பணி ஒதுக்கப்பட்டது என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது. வரும்,22 அல்லது, 23ம் தேதி தான், எந்த ஓட்டுச்சாவடியில் பணி என்பது தெரியவரும். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டஅலுவலர், பணி ஒதுக்கீடு கடிதத்தை பெற்றுக் கொண்டு, தேர்தல் நடக்கும் நாளுக்கு முதல் நாள் அங்கு இருக்கவேண்டும். புதிய நடைமுறையால், எவ்வித முறைகேடு மற்றும்சிபாரிசு நடக்க வாய்ப்பு ஏற்படாது. இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.

No comments:

Post a Comment