திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள கீழ்பாக்கம் அரசு நடுநிலை பள்ளியில் 94மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இதில் தினமும் மதிய சத்துணவு 26மாணவ,மாணவிகள் சாப்பிட்டு வருகின்றனர் இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மதிய உணவு வேளையில் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட உணவை மாணவர்களும் சாப்பிட்டு கொண்டிருந்த போது மாணவர் ஒருவருக்கு வழங்கிய சாம்பாரில் பல்லி இருந்தது தெரியவந்துள்ளது. இந்த தகவலை சத்துணவு அமைப்பாளரிடம் மாணவர் சொல்லும் போதே சாப்பிட்டு கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் வயிறு வலிக்கிறது என்று கூறியுள்ளனர். சற்று நேரத்தில் உணவு அருந்திய 26 மாணவர்களில் பலர் மயக்கம் அடைந்துள்ளனர். உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்துணவு அருந்திய அனைத்து மாணவர்களையும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளார்.பின்னர் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வந்தவாசி தாசில்தார் ராஜலஷ்மி சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றார். சத்துணவு சாப்பிட்டு மாணவர்கள் மயக்கமான சம்பவத்தை கேள்விபட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் மற்றும் கீழ்பாக்கம் கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment