எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஆங்கிலம் 2–ம் தாளில் கேள்விகள் எளிதாக இருந்தன. ஆனால் இந்த தேர்வை 1,543 பேர் எழுதவில்லை.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. ஆங்கிலம் 2–ம் தாளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு மிகவும் எளிதாக இருந்தது என்று ஒப்பணக்காரவீதி மாநகராட்சி பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவிகள் தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:–
மாணவி கவிப்பிரியா கூறுகையில், ‘எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் ஆங்கிலம் 2–ம் தாளுக்கான தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. பொதுத்தேர்வுக்காக ஆரம்பத்தில் இருந்தே படித்ததால், தேர்வு எழுதுவதில் எந்தவித சிரமமும் ஏற்படவில்லை. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களை தேர்வு செய்து படித்தேன். அதற்கு ஏற்றவாறே, பொதுத்தேர்வில் கேள்விகள் அமைந்திருந்தன. இதனால் 85 மதிப்பெண்ணுக்கு மேல் கிடைக்கும்’ என்றார்.
மாணவி கேர்லின்
மாணவி கேர்லின் கூறுகையில், ஆங்கிலம் 2–ம் தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. வினாக்கள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு 1 மதிப்பெண், 5 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. பகுதி 3–ல் தகவல் தொடர்பு திறமையை பரிசோதிக்கும் வகையில் 15 மதிப்பெண்களுக்கு 3 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இந்த கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன.
பகுதி 4–ல் 1 மதிப்பெண்ணுக்கான விவரித்து எழுதுதல், புள்ளி விவரம் ஒன்றை கொடுத்து அதில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு தலா 4 பதில்கள் கொடுக்கப்பட்டு அதில் இருந்து சரியான விடையை தேர்வு எழுதுதல், 5 மதிப்பெண்ணுக்கான பத்தி அமைத்து எழுதுதல் மிகவும் எளிதாகவும், எங்களுக்கு புரியும் வகையில் இருந்தது. இந்த பாடத்தில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றார்.
மாணவி ரிஸ்வானா
மாணவி ரிஸ்வானா கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்காக ஆரம்பத்தில் இருந்தே நன்றாக படித்து வந்தேன். வினா வங்கி புத்தகம், முந்தைய ஆண்டு பொதுத்தேர்வின் வினாத்தாள்கள் ஆகிய வற்றை அடிப்படையாக வைத்து படித்தேன். ஆசிரியர்களும் பொதுத்தேர்வுக்கு படிப்பதற்காக எங்க ளுக்கு உறுதுணையாக இருந்தனர். இதனால் தேர்வு கடினமான தெரியவில்லை. மிகவும் எளிதாக இருந்தது. 90–க்கு மேல் மதிப்பெண் கிடைக்கும் என்றார்.
மாணவி தன்சில் சித்தாரா
மாணவி தன்சில் சித்தாரா கூறுகையில், ‘ஆங்கிலம் 2–ம் தாள் தேர்வில், 1 மதிப்பெண், 5 மதிப்பெண் கேள்விகள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன. வரைபடம் கொடுத்து அதற்கு விளக்கம் அளித்தல், மொழி பெயர்ப்பு பகுதி, பொது கட்டுரை, கொடுக் கப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் பத்தி அமைத்து எழுதுதல், பொருத்துதல் ஆகிய பகுதிகள் எளிதாக இருந்தன. இந்த பாடத்தில் 90 மதிப்பெண்ணுக்கு மேல் கிடைக்கும்’ என்றார்.
No comments:
Post a Comment