கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளில் இலவச பாடப் புத்தகங்களை விநியோகிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. முப்பருவ பாட முறையே வரும் கல்வி ஆண்டிலும் தொடர்கிறது. இதில் முதல் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளன.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பாடப்புத்தகங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் புத்தங்களை ஜூன் 2ல் மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே நாளில் இலவச பஸ் பாஸ்கள் வழங்கவும் போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள மாணவர்களின் கணக்கின்படி, பஸ் பாஸ் அட்டைகள் தயாராகி வருகின்றன.
பாடம், நோட்டு புத்தகங்கள் வழங்கிய இரு வாரங்கள் கழித்து சீருடை, காலணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment