கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுழைவுத் தேர்வு வைத்து மாணவர் சேர்க்கை நடத்தியதால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர். கோவை டவுன்ஹால் பகுதியில் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், வரும் கல்வியாண்டில் 6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு நேற்று நுழைவுத் தேர்வு நடந்தது. இதற்கு, பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கூட மாணவர் சேர்க்கை நடத்திட, மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று கல்வித் துறை தெரிவித்துள் ளது.
இந்த விதி அரசு உதவி பெறும் பள்ளிக்கும், அரசு பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில் “பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது. இதுகுறித்து விளக் கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளியிடம் கேட்டுள் ளோம். அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
No comments:
Post a Comment