Tuesday, 1 April 2014

மாணவர்களுக்கு பின்னறிவு தேர்வு

ஆர்.எம்.எஸ்.ஏ., (அனை வருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) சார்பில், பத்தாம் வகுப்புக்கு செல்லும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. "ஆல் பாஸ்' முறையில், ஒன்பதாம் வகுப்பு வரை வரும் மாணவர்களில் சிலர், படிப்பில் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர். தமிழ் மொழியில் எழுதுவதும், படிப்பதும், அவர்களுக்கு சிரமமாக உள்ளது. ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் அவர்கள், பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வை சந்திக்க பயந்து, படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். இதை தவிர்க்க, ஒன்பதாம் வகுப்பிலேயே, படிப்பில் மிக பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது தனி கவனம் செலுத்தி, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 151 மையங்களில், 4,048 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் முன்னறி தேர்வு நடத் தப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அம்மாணவர்களுக்கு பின்னறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டை கொண்டு, கல்வித்தரம் அறியப்படும். பத்தாம் வகுப்பில், எளிதில் அவர்கள் தேர்ச்சி பெற, இத்தேர்வு ஊக்குவிப்பதாய் அமையும், என, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதியப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment