Saturday, 26 April 2014

SMS, இன்டர்நெட் மூலமும் ஏற்பாடு : பிளஸ் 2 தேர்வு மே 9ம் தேதி ரிசல்ட்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படுகிறது. இதை மாணவர்கள் இணையதளம் மூலம் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், தேர்வுத் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. www.tnresults.nic.inwww.dge1.tn.nic.in,www.dge2.tn.nic.in,www.dge3.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இவற்றில்http://www.dge1.tn.nic.in என்ற இணைய தள முகவரி ஸ்மார்ட் போன் மூலம் தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள 09282232585 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் அனுப்பி பெறலாம். TNBOARD space registration no,DOBin DD/MM/YYYY என்று பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளும் வசதி 9ம தேதி காலை 10 மணிக்கு பிறகே பயன்படுத்த முடியும். முன்னதாக எஸ்எம்எஸ் அனுப்பினால் பெற முடியாது. மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களில் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாண வர்கள் தாங்கள் படித்த பள்ளிகளி லும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் எந்த ஒரு பாடத்துக்கும் விடைத்தாள் நகல் கோரியோ அல்லது மறு கூட்டல் செய்யவோ விண்ணப்பிக்கலாம். அப்படி விரும்புவோர் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாள் நகல் பெறுவதற்கு பகுதி 1 மொழி ரூ.550, பகுதி 2 மொழி ஆங்கிலம் ரூ.550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய பகுதி 1 மொழி, பகுதி 2 (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment