ப்ளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு, ஜூன் மூன்றாம் தேதி, உடனடி தேர்வு நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில், கோபி, ஈரோடு என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவ்விரண்டிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ப்ளஸ் 1 பயில்கின்றனர். பெரும்பாலும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐந்து சதவீத மாணவ, மாணவியர், தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள், அந்தந்த பள்ளிகளில், கடந்த ஐந்தாம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு வாய்ப்பாக, ஜூன் மூன்றாம் தேதி மீண்டும் தேர்வு நடக்கிறது. இதில் தேர்வு பெற்றால், ப்ளஸ் 2 தேர்வு எழுதலாம்.
தேர்ச்சி அடைய தவறினால், மீண்டும் ப்ளஸ் 1 படிக்க வேண்டும். கோபி கல்வி மாவட்டத்தில், ஐந்தாம் தேதி, ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஈரோடு கல்வி மாவட்டத்தில், நேற்று ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
No comments:
Post a Comment