பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் அவசியம். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகள் மூலம் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்கள் 21ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. அவர்கள் அதேஇடத்தில் தங்கள் வேலை வாய்ப்பு பதிவையும் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு பதிவு 21ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை பள்ளிகளில் பதிவு செய்யப்படும். பிளஸ் 2 தேர்ச்சி தகுதியை பதிவு செய்து கொள்ள, எஸ்எஸ்எல்சி மதிப்பு மதிப்பெண் பட்டியல்கள் அவசியம். எனவே, மாணவர் கள் அந்த சான்றிதழை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment