Sunday, 11 May 2014

பிளஸ்2 தேர்வு: முதல்வர் தொகுதியில் 97.26 சதவீதம் தேர்ச்சி


திருச்சி,: முதல்வர் தொகுதியில் ஸ்ரீரங்கம் தொகுதியில் 19 பள்ளிகளில் 4 பள்ளிகள் மட்டு0 சதவீதம் தேர்ச்சி பெற்றுள் ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்தம் 8 அரசு மேல் நிலைப்பள்ளிகள், 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 19 பள்ளிகள் உள்ளன. நேற்று வெளியிடப்பட்ட பிளஸ்2 தேர்வில் அரசு பள்ளிகளில் திருச்செந்துறை அரசு மேல் நிலைப்பள்ளியில் 47 பேர் தேர்வு எழுதியதில் 47 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். பூங்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் 45 பேர் தேர்வு எழுதியதில் 44 பேரும், சோமரசம் பேட் டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 189 பேர் தேர்வு எழுதியதில் 180 பேரும், எட்டரை அரசு மேல் நிலைப் பள்ளியில் 209 பேர் தேர்வு எழுதியதில் 168 பேரும், அயிலா பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 171 பேரில் 141பேரும், இனாம் குளத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 109 பேரில் 100பேரும், கண் ணுடையான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 55 பேர் தேர்வு எழுதியதில் 40 பேரும், இனாம்குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி யில் 47 பேர் தேர்வு எழுதி யதில் 39 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதே போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில், திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 255 பேர் தேர்வு எழுதிய தில் 230 பேரும், திருவரங் கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 430 பேர் தேர்வு எழுதியதில் 397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் திருப்பராய்த்துறை விவே கானந்தா மேல் நிலைப் பள்ளியில் 194 பேர் தேர்வு எழுதியதில் 194 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெட்டவாய்த்தலை ரத்னா மேல்நிலைப்பள்ளி யில் 118 தேர்வு எழுதியதில் 112 பேரும், அம்மா பேட்டை ஹோலிபேமிலி ஆர்சி மேல்நிலைப்பள்ளி யில் 149 பேர் தேர்வு எழுதி யதில் 148 பேரும், சோம ரசம் பேட்டை புனித வள னார் மேல்நிலைப் பள்ளி யில் 194 பேர் தேர்வு எழுதி யதில் 193 பேரும், அல்லூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலாயா மேல்நிலைப் பள்ளியில் 277 பேர் தேர்வு எழுதியதில் 271 பேரும், முத்துக்குளம் அன்னை இந்திரா மேல்நிலைப்பள்ளி யில் 104 பேர் தேர்வு எழுதி யதில் 88 பேரும், நாகமங்க லம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 73 பேர் தேர்வு எழுதியதில் 68 பேரும், அளுந்தூர் புனித பேட்ரிக் மேல்நிலைப்பள் ளியில் 148 பேரில் தேர்வு எழுதியதில் 148 பேரும், புங்கனூர் புனிதவளனார் மேல்நிலைப்பள்ளியில் 151 பேரில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 4 பள்ளிகள் சென்டம் வாங்கியுள்ளன. திருச்செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி 100 சத வீதமும், தனியார் பள்ளி களான திருப்பராய்த்துறை விவேகானந்தா மேல் நிலைப்பள்ளி 100 சதவீத மும், அளுந்தூர் புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதமும், புங்கனூர் புனித வளனார் மேல் நிலைப்பள்ளி 100 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றுள் ளது. 
இதில் மொத்தம் 2,965 பேர் தேர்வு எழுதிய தில் 2,884 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 81 பேர் பெயிலாகி உள்ளனர். 97.26 சதவீதம் தேர்ச்சியா கும்.

No comments:

Post a Comment