சென்னையில் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியரை கொலை செய்த வழக்கில் மாணவனுக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் தனது ஆசிரியை உமா மகேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
ஆசிரியரை சக மாணவர்கள் முன்னால் கொலை செய்த அந்த மாணவனை போலீஸார் கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பின்னர் மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணையின் போது மாணவன் அளித்த வாக்குமூலத்தில், படிப்பில் கவனம் செலுத்துமாறு ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி தன்னிடம் கூறியதும். தனது படிப்பு தொடர்பாக பெற்றோரிடம் தெரிவிப்பேன் என கூறியதும் கோபத்தை ஏற்படுதியதாகவும். அதனாலேயே அவரை கொலை செய்ததாகவும் கூறினார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சிறார் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவனை இரண்டு ஆண்டுகள் சிறுவர் இல்லத்தில் அடைக்குமாறு உத்தரவிட்டது.
No comments:
Post a Comment