Thursday, 8 May 2014

+2 மதிப்பெண் சான்றிதழ் எப்போது?

பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத் தெரிகிறது.
பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 20 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்துடன் மதிப்பெண் சான்றிதழ் நகலையும் மாணவர்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியது:
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. தேர்வு எழுதிய 8.78 லட்சம் மாணவர்களுக்குமான மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்படும். இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொன்றிலும் அச்சுப்பிழைகள் உள்ளதா என தனித்தனியே சரிபார்க்கப்படும். சரிபார்ப்பு பணிகளுக்காக குறைந்தது 8 நாள்களாவது தேவைப்படும். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு குறைந்தபட்சம் ஒரு வாரம் கழித்துத்தான் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மே 16, 17 தேதிகளுக்குப் பிறகு மதிப்பெண் சான்றிதழ்கள் கிடைத்தால்கூட அதை நகலெடுத்து பூர்த்திசெய்த விண்ணப்பத்துடன் அனுப்புவதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். மாணவர்களிடம் மதிப்பெண் சான்றிதழ் நகலைக் கோராமல், தேர்வு முடிவுகளின்போது வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலை மட்டுமே அண்ணா பல்கலைக்கழகம் கோர வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment