Tuesday, 6 May 2014

ஐஐடி-க்கான நுழைவுத் தேர்வில் நெய்வேலி மாணவர்கள் சாதனை- 64 பேரில் 61 பேர் 2-ம்கட்ட தேர்வுக்கு தகுதி

நாட்டின் தலைசிறந்த தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடி எனப்படும் இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையங்களில் பயிலவிருக்கும் மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வில் நெய்வேலி ஜவகர் மேநிலைப்பள்ளி மாணவ மணிகள் 61 பேர் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நாட்டின் தலைசிறந்த தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் பயில, நெய்வேலி மாணவ மணிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், நெய்வேலி ஜவகர் கல்விக் கழகமும், நெய்வேலி தெலுங்கு கலாச்சார சங்கமும் இணைந்து ஒரு சிறப்பு மேல்நிலைப்பள்ளியை 2005-ம் ஆண்டு நெய்வேலியில் தொடங் கின. இப்பள்ளியில் மத்திய பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்படுவதுடன், ஐஐடி நுழை வுத் தேர்வுக்கான பயிற்சி யும் ஒருங்கிணைந்து வழங்கப் படுகிறது.
தமிழகத்தில் முதலிடம்
இப்பள்ளியில் 2007-ம் ஆண்டி லிருந்து மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்து வெளியேறிய மொத்தம் 297 மாணவ மணிகளில், இதுவரை 230 மாணவர்கள் ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிலையங்களில் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ கத்தில் உள்ள எந்தவொரு பள்ளி யிலும் இதுபோன்று சாதனையை நிகழ்த்தவில்லை.
முதல்நிலைத் தேர்வு
இந்நிலையில் 2014-15ம் கல்வியாண்டில் ஐஐடி கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க் கைக்கான முதல்நிலை நுழைவுத் தேர்வு 6-4-2014 அன்று நடை பெற்றது. இத்தேர்வில் இந்திய அளவில் 13 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற் றனர். இதற்கான தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிப்பட்டது. அதில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர் களில் நெய்வேலி வட்டம் 5-ல் உள்ள ஜவகர் மேநிலைப் பள்ளியில் பயின்ற 64 பேரில் 61 பேர் தேர்வுபெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் பயின்ற 50 மாணவிகளில் 48 பேரும், 14 மாணவர்களில் 13 பேரும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள னர். நெய்வேலி ஜவகர் மேல்நிலைப்பள்ளி 95.3 சதவிகிதம் பெற்று தமிழக பள்ளிகளில் அதிக சதவிகிதத்தைப் பெற்றுள்ளது. இவர்கள் இம்மாதம் 25-ம் தேதி நடக்கவிருக்கும் இறுதிக் கட்ட சிறப்புத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்வு பெற்ற மாணவ, மாண விகள், பள்ளி முதல்வர், ஆசிரி யர்கள், நெய்வேலி தெலுங்கு கலாச்சார சங்க நிர்வாகிகளை கவுரவிக்கும் வகையில் திங்கள் கிழமை நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன் பங்கேற்று, அனைவரையும் பாராட்டினார்.

No comments:

Post a Comment