அண்ணாமலை பல்கலைக்கழக முதலாண்டு ஆங்கில தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான கேள்விகள் இடம் பெற்றதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலை நிலை கல்வி தேர்வுகள் தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகின்றன. இளங்கலை முதலாண்டு மாணவர்களுக்கான ஆங்கில தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. பி.ஏ. பி.எஸ்சி, பி.சி.ஏ., பி.மியூசிக், பி.டான்ஸ் ஆகிய பிரிவுகளில் முதலாண்டு படிக்கும் மாணவர்கள் நேற்று முன்தினம் மதியம் தேர்வெழுதினர்.
தங்களுக்கு வழங்கப் பட்ட கேள்வித்தாளை பார்த்த தும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆங்கில பாடத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத வகையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான கேள்விகள் 40 மதிப்பெண்களுக்கு இடம் பெற்றிருந்தது. கேள்வித்தாளில் இரண்டாம் பகுதியில் 11 முதல் 20 வரை 4 மதிப்பெண் கேள்விகள் 10 இடம் பெற்றிருந்தது. இவற்றில் 5 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். சிறு குறிப்பு வரைக எனப்படும் இந்த பகுதியில் இடம் பெற்றிருந்த 10 கேள்விகளும் கம்ப்யூட்டர் தொடர்பான கேள்விகளாக இருந்தது. இன்டர்நெட், சைபர் கிரைம், ஸ்பேம், டிராஷ், வெப்பேஜ், யூ.பி.எஸ்., டூல் பார், டேட்டா, யூசர், மோடம் என கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் இடம் பெறும் கேள்விகள் இதில் இடம் பெற்றிருந்தன.
இதே போன்று 20 மதிப்பெண் கேள்விகளைப் பொருத்தவரை நான்காம் பகுதியில் 24, 25, 26 ஆகிய மூன்று கேள்விகளில் ஏதாவது ஒரு கேள்விக்கு விடையளிக்க வேண்டும். இந்த பகுதியில் மூன்று கேள்விகளுமே கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான கேள்விகளாகவே இருந்தது.ஆங்கில தேர்வெழுதிய மாணவர்கள், தங்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அண்ணாமலை பல்கலை தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து, பாடத்திட்டத்தில் இடம் பெறாத கேள்விகளுக்கான மதிப்பெண் களை தேர்வெழுதியவர்களுக்கு வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment