தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை
பள்ளிகள் மேற்கொள்ள கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மெட்ரிக் பள்ளிகளின் பெருக்கத்தாலும், அவை மேற்கொள்ளும் பல்வகை விளம்பர உத்திகளாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதிய உத்திகளைக் கையாள கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்டதொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும், இடைநிற்றலைக் குறைக்கவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு 14வகையான விலையில்லாத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
எனவே, பள்ளிகள் அதன் அருகேயுள்ள குடியிருப்புகளில் உள்ள குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாணவர் சேர்க்கை தொடர்பான விளம்பரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரம் செய்தல் வேண்டும்.
சேர்க்கை தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்குவதுடன், முக்கியப் பகுதிகளில் பேனர்களை வைக்க வேண்டும். மேலும், மாணவர் சேர்க்கை ஊர்வலத்தையும் நடத்த வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment