Friday, 9 May 2014

தீவிர கண்காணிப்பில் தபால் ஓட்டு பெட்டி: அதிகாரிகள் அதிரடியால் கட்சியினர் கலக்கம்


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தபால் ஓட்டு பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பு காரணமாக ஒட்டு மொத்தமாக தபால் ஓட்டுகளை செலுத்த முடியாமல் அரசியல் கட்சியினர் திணறி வருகின்றனர். விழுப்புரம் லோக்சபா தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு சீட்டுகள் வழங்கப் பட்டுள்ளது. தபால் ஓட்டு வழங்க கோரி, 5,058 அரசு பணியாளர்கள் விண்ணப்பித் ததில், 4,831 பேருக்கு ஓட்டு சீட்டுகள் அனுப்பப் பட்டுள்ளது. இதில், தேர்தல் பணி பயிற்சி மையத்தில், 227 பேர் தபால் ஓட்டுக்களை நேரடியாக செலு<த்தினர். நேற்று வரை இரண்டாயிரம் தபால் ஓட்டுகள் திரும்ப வரப் பெற்றுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட தபால் ஓட்டுகள் உரியவர்களுக்கு சென்று சேரவில்லை.
எதிர் கட்சிகள் புகார் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில், தபால் ஓட்டுகளை கையாள்வதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுப்பப் பட்டது. தி.மு.க.,- தே.மு.தி.க., மற்றும் காங்., உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பேசுகையில், தபால் ஓட்டுகளை, அந்தந்த ஊழியரே நேரில் வந்து ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளதா அல்லது அவரது சார்பில் யார் வேண்டுமானாலும் தபால் ஓட்டினை சேர்ப்பிக்க வழி உள்ளதா என தெளிவுபடுத்த வேண்டும். தபால் ஓட்டுகளை, சம்பந்தப்பட்ட வாக்காளரை தவிர வேறு நபர்கள் ஒப்படைத்தால், அது செல்லாத ஓட்டு என அறிவிக்கப்படுமா என்பதை அதிகாரிகள் விள க்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கண்காணிப்பு தீவிரம் : விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கான தபால் ஓட்டுகளை பதிவு செய்வதற்காக, கலெக்டர் அலுவலகத் தில் பிரத்யேக பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக அறையின் எதிர்புறம் உள்ள தபால் ஓட்டு பெட்டிக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.
தபால் ஓட்டினை கொண்டு வரும் நபரை, வீடியோ மூலம் பதிவு செய்வதற்காக கண்காணிப்பு கேமரா தயார் நிலையில் உள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் ஒட்டுமொத்தமாக தபால் ஓட்டுகளை சேகரித்து, ஓட்டு பெட்டியில் செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஆரம்பத்தில் தபால் ஓட்டுகளை மொத்தமாக சிலரே பெட்டியில் போட்டனர். கடந்த சில தினங்களாக மொத்தமாக தபால் ஓட்டுகளை போடுவது தவிர்க்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment