அரசு வழங்கிய ரூ.1.32 கோடி கல்வி உதவித் தொகையை, மாணவர்களுக்கு வழங்காமல், அதை அரசுக்கே சென்னை தொலைதூர கல்வி நிறுவனம் திருப்பி அனுப்பியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சென்னை பல்கலை தொலை தூர கல்வியில் இளங்கலை, முதுகலை உள்ளிட்ட பட்ட படிப்புகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவி தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு சென்னை பல்கலை மூலம் தகுதியான மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் பிறகு அரசால் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆனால் கடந்த 2008 முதல் சென்னை பல்கலை தொலை தூர கல்வி பயின்று வரும் இளங்கலை படிக்கும் மாணவர்கள் 622 பேர், முதுகலை படிக்கும் மாணவர்கள் 833 பேரும், 2009ல் இளங்கலையில் 750 பேரும், முதுகலையில் 798 பேரும். 2010ல் இளங்கலையில் 697 பேரும், முதுகலை மாணவர்கள் 962 பேரும் உதவி தொகை வேண்டி விண்ணப்பித்தனர். இந்த உதவிதொகை பெற தகுதியான மாணவர்களின் பட்டியலை தயார் செய்யும் பணிக்காக போதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், 2008ல் விண்ணப்பித்த மாணவர்களுக்கு 2011ல் தான் 1 கோடியே 32 லட்சம் உதவித்தொகை வந்துள்ளது.
ஆனால், விண்ணப்பித்த மாணவர்கள் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பை முடித்து சென்று விட்டதால் அந்த பணத்தை மீண்டும் சென்னை பல்கலை அரசுக்கு அனுப்பி வைத்தது. இதனால், மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிதொகை அப்படியே போடப்பட்டது. அதே போல 2009 மற்றும் 2010ல் உதவி தொகை வேண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கும் தற்போது வரை உதவி தொகை பெற தகுதியான மாணவர்களின் பட்டியலை கூட தயாரிக்கவில்லை.
இதனால், 2009 மற்றும் 2010ல் யி2 கோடியே 64 லட்சம் மதிப்பிலான உதவி தொகையும் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில், ஊழி யர் பற்றாக்குறை காரண மாக தகுதியான மாணவர்களின் பட்டியலை தயாரிக்க முடியவில்லை. இதனால், 2008 முதல் 12 வரை விண்ணப்பித்த மாணவர்கள் ஒருவருக்கு கூட உதவித்தொகை கிடைக்க வில்லை‘ என்றார்.
No comments:
Post a Comment