Friday, 23 May 2014

மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம்


திருப்பூர் மாவட்டத்தில், அரசு உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த, பட்டியல் தயாரிக்கும் பணியில், கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர்.
வரும் 2014-15ம் கல்வியாண்டில், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பலவற்றை, மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியலை, மாவட்டம் வாரியாக தயாரித்து அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி உள்ள பகுதியில், உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கூடாது. அருகருகே, மேல்நிலைப்பள்ளிகள் இருக்கும் பட்சத்தில், புதிதாக ஒரு மேல்நிலைப்பள்ளியை அங்கு உருவாக்கக் கூடாது என கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
பள்ளிகளை தரம் உயர்த்த, பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக இரண்டு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அவ்வகையில், கடந்தாண்டுகளில் பங்கு தொகை பெற்ற பள்ளிகளை, மேல்
நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து, 
பங்குத்தொகை செலுத்திய பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்
பட்டுள்ளது. அதனடிப்படையில், தரம் உயர்த்த வேண்டிய உயர்நிலைப்பள்ளிகள், முன்னுரிமை அளிக்க வேண்டிய பள்ளிகள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பணியில், மாவட்ட கல்வித்துறை
அதிகாரிகள் உள்ளனர்.

No comments:

Post a Comment