Sunday, 29 June 2014

20 லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு


லண்டன்,ஜூன் 28-இங்கிலாந்தில் 20 லட்சம் ஆசிரியர்கள் வருகிற ஜூலை 20-ம் தேதி தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு சதவிகித சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் 20 லட்சத்துக்கும் அதிமான ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு முதல் அரசு ஒரு சதவிகித சம்பள உயர்வு அளித்து வருகிறது. அரசின் இந்த சம்பள உயர்வு ஆசிரியர்களுக்கு கடும் அதிருப்தியை அளித்தது. அவர்கள் பலமுறை கூடுதல் சம்பள உயர்வு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.ஆனால் அரசு இவர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.

தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆசிரியர்கள் கருதினார்கள். இதனால் இங்கிலாந்து. வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவற்றில் வேலைபார்க்கும் 20 லட்சம் ஆசிரியர்கள் வருகிற ஜூலை 20-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர் சங்கமான யுனிசன் அறிவித்து உள்ளது. இங்கிலாந்து ஆசிரியர்களின் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு இங்கிலாந்து அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment