இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தனியார் சுயநிதிப் பள்ளியில் சேர ஜூன் 30ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி வயதுக் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிந்த பிரிவினருக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டில் சேர மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜூன் 30ஆம் தேதி வரை தற்போது காலநீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நலிந்த பிரிவினர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பள்ளியில் சேர்ந்திட ஏதுவாக சேர்க்கை ஆணை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் வழங்கப்படும். அந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும்.
No comments:
Post a Comment