கண்டமங்கலம் ஒன்றியம் சின்னபாபுசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை மற்றும் குறிப்பேடுகளை வழங்கி மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் கவுரிபாலக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இப்பள்ளியில் 2014-2015ம் கல்வியாண்டிற்கான (ஆங்கில வழிக்கல்வி) முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தனியார் பள்ளிகளில் இருந்து முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பில் சேர்ந்த 20 மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தனது சொந்த செலவில் கல்வி ஊக்கத்தொகையாக தலா 500 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். ஊராட்சி துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள் அருள், ராஜவள்ளி மற்றும் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். பள்ளியின் பட்டதாரி ஆசிரியை ஜெயந்திடெய்சி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment