Friday, 6 June 2014

சென்னை டி.பி.ஐ கல்வி அலுவலகங்களில் புரோக்கர்கள் நடமாட்டம்


பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் போராடி வருகிறார்கள். தாங்கள் விரும்பும் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்று விரும்புவதால் இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எல்.கே.ஜி., முதல் பிளஸ் – 2 வரை மாணவர் சேர்க்கைகான இந்த நேரத்தில் தங்கள் குழந்தை ஆங்கிலம் சிறப்பாக பேச வேண்டும்.

அதிக மதிப்பெண் எடுத்து பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசையில் பெற்றோர்கள் குறிப்பிட்ட சில பள்ளிகளில் இடம் வாங்குவதில் குறியாக இருக்கிறார்கள். இதற்காக பணம் கொடுக்கவும் தயாராக இருக்கும் அவர்கள் டிப் – டாப் புரோக்கர்களின் வலையில் விழுகிறார்கள்.

எந்த பள்ளியில் வேண்டுமானாலும் இடம் வாங்கி தருகிறோம். பணம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை செலவாகும் என்று வாக்குறுதி கொடுக்கிறார்கள்.

இந்த டிப்–டாப் புரோக்கர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிறந்த பள்ளிகளில் எந்த வகுப்பிற்கும் ‘சீட்டு’ வாங்கி கொடுக்கிறார்கள்.

கல்வி அதிகாரிகளிடம் தங்களுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி இந்த இடைத்தரகர்கள் காரியத்தை செவ்வனே முடிக்கிறார்கள்.

சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இவர்கள் கார்களில் தான் வலம் வருகிறார்கள். ஒவ்வொரு இயக்குனர் அலுவலகத்திலும் இத்தகைய நபர்களுக்கு தனி மரியாதையும் அளிக்கப்படுகிறது.

இயக்குனர் அலுவலகத்திற்கு எந்தவித முன் அனுமதியும் பெறாமல் உள்ளே செல்லும் டிப் – டாப் புரோக்கர்களை பார்த்தால் அடையாளம் காணமுடியாது.

கல்வி துறையில் பணியாற்றும் அதிகாரிகள் போலவே இவர்களும் மிக நேர்த்தியாக வந்து செல்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளை கட்டுபடுத்தும் அதிகாரம் கொண்ட மெட்ரிக் பள்ளி இயக்குனர் அலுவலகத்தில் இந்த இடைத்தரகர்கள் சுற்றித் திரிகிறார்கள்.

ஒவ்வொரு துறை இயக்குனர்களிடம் நேரில் சென்று சிபாரிசு கடிதம் வாங்கி கொண்டு காரியத்தை கச்சிதமாக முடிக்கிறார்கள். இவர்கள் சொல்வதை கல்வித்துறை அதிகாரிகளின் உதவியாளர்கள் உடனே செய்து முடிப்பார்கள். அந்த அளவிற்கு செல்வாக்கும் அதிகாரமும் படைத்த இந்த புரோக்கர்களின் அட்டகாசம் தற்போது அதிகாரித்து வருகிறது.

அதிகாரிகளை பார்க்க பார்வையாளர் வெளியே காத்து நிற்கும் போது டிப் – டாப் ஆசாமிகள் மட்டும் நீண்ட நேரம் நேரத்தை வீணடித்து அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருப்பதை காண முடிகிறது.

அதிகாரிகளின் வேலை நேரத்தை வீணாக்கும் இந்த தரகர்கள் டி.பி.ஐ வளாகத்தில் சுற்றித்திரிகிறார்கள்.

இவர்களின் அத்துமீறல் ஒரு சில நல்ல அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவர்களும் டிப் – டாப் ஆசாமிகளின் பேச்சுக்கு ஜால்ரா போடும் நிலை உள்ளது.

No comments:

Post a Comment