ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டியில் தனியார் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியையாக பிரேமா (வயது 30) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 3–ம் வகுப்புக்கு பாடம் நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் லிங்கதுரை என்பவரது மகன் ராஜசேகர் (9) 3–ம் வகுப்பு படித்து வருகிறான்.
வகுப்பு அறையில் ஆசிரியை பிரேமா கையில் பிரம்பு கம்பை சுற்றி கொண்டு பாடம் நடத்தியபோது மாணவர் ராஜசேகர் இடது கண்ணில் பட்டது. அவனை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் கடந்த 5.3.2014 அன்று நடைபெற்றது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவன் கண் பார்வை இழந்தான்.
இது குறித்து ஆசிரியை மீது நவடிக்கை எடுக்கக்கோரி ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment