Sunday, 13 July 2014

2 ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றும் உயர் நிலைப்பள்ளி


திருத்துறைப்பூண்டியை அடுத்த பாண்டி கிராமத்தில் 6 முதல் 10–ம் வகுப்பு வரை உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 35 வருடமாக இயங்கி வருகிறது. இதில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 650 ஏழை மாணவ–மாணவிகள் கல்வி பயில்கின்றனர். ஆனால் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் 10 ஆசிரியர் பணியிடங்கள் 3 வருடங்களாக காலியாக உள்ளது. வெறும் 2 ஆசிரியர்கள் மட்டுமே வைத்து பள்ளி செயல்படுவதால் ஏழை மாணவர்கள் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

தேர்ச்சி விழுக்காடு கடந்த வருடம் 64 சதவீதத்தில் இருந்து நடப்பு வருடம் சுமார் 45 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கழிவறை வசதி சுத்தமாக இல்லாததால் திறந்த வெளியை கழிவறையாக மாணவ–மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுசம்பந்தமாக மாவட்ட நுகர்வோர் மையத்துக்கு பல புகார்கள் வந்து, அதனை கல்வி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. திருவாரூர் மாவட்ட கல்வித்துறை உடனடியாக செயல்பட்டு பாண்டி அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தியும், 10 ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்து தர உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் மையம் சார்பில் அதன் தலைவர் இரா.நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment