Sunday, 20 July 2014

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பின்னடைவுக் காலிப் பணியிடங்களை நிரப்ப 6 மாதத்துக்குள் நடவடிக்கை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங் களை நிரப்புவதற்கான நடவடிக்கை களை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பின் நிறுவனர் எஸ்.கருப்பையா மனு தாக்கல் செய்திருந்தார்.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரை நியமிப் பதற்கான 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இந்தப் பின்னடைவுக் காலிப் பணியிடங்களை நிரப்பிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. ஆகவே, தாழ்த்தப்பட் டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தொடர்பாக தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஜி.சரவணகுமார், பி.விஜேந்திரன், அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வழக்கறிஞர் என்.எஸ்.நந்தகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட் டனர்.

அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள் வெள்ளிக் கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

அரசின் அனைத்துத் துறை களிலும் எஸ்.சி. பிரிவினருக்கான 18 சதவீதப் பணியிடங்கள் மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கான 1 சதவீதப் பணியிடங்கள் என்ற அடிப்படையில், அந்தப் பிரிவின ருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிந்து நிரப்பு வதற்காக உயர் நிலைக் குழு ஒன்றினை கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவானது தனது அறிக்கையை அரசுக்கு அளித்த பிறகு, அரசு தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என தமிழக அரசின் சார்பில் இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பின்னடைவுக் காலிப் பணி யிடங்களை கண்டறிவது தொடர்பான உயர் நிலைக் குழுவின் பணிகள், அந்தக் குழுவின் அறிக்கை பெற்ற பின் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசின் உத்தரவு கள் என இந்த நடவடிக்கைகள் யாவும் 6 மாத காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment