Tuesday, 15 July 2014

போட்டிகளில் பங்கேற்க வேண்டும் மாணவிகளுக்கு சி.இ.ஓ., "அட்வைஸ்'


விளையாட்டு போட்டிகளில் பள்ளி மாணவிகள் அதிகளவில் பங்கேற்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று சி.இ. ஓ., மார்ஸ் பேசினார்.
கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அலுவலகத்தில் நடந்த உடற்கல்வி துறையின் செயல்திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் மாநில விளை யாட்டு போட்டிகளில் மற்ற மாவட்ட மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்கின்றனர். நமது மாவட்டத்திலிருந்து குறைந்த மாணவிகள் பங்கேற்கின்றனர். விளையாட்டு மைதானங்ளை தினம் பராமரிக்க வேண்டும். சில பள்ளிகள் விளை யாட்டில் பங்கேற்று வெற்றி பெறுவதை ஆண்டுதோறும் தக்க வைத்து கொள்கின்றனர். இதனை அனைத்து பள்ளிகளும் பின் பற்ற வேண்டும். விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் பங்கேற்பது குறைவாக உள்ளது. அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ö வளி மாவட்டங்களுக்கு மாணவிகளின் பெற்றோர்களிடம் அனுமதி பெற்று பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். துணை யாக பெண் ஆசிரியைகள் கண்டிப்பாக செல்ல வேண் டும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவிகளை பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். மாநில அளவிலான குத்துச்சண்டை, பென்சிங், கேரம் போட்டிகளை சிறப்பாக நடத்தினோம். அதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சி.இ. ஓ., மார்ஸ் பேசினார்.

No comments:

Post a Comment