Tuesday, 1 July 2014

முதல் பருவத் தேர்வு கேள்வித்தாள் தயாரிக்க வல்லுநர் குழு


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்ப தேர்வுகள், ஆண்டு தேர்வுகள் ஆகியவற்றுக்கான கேள்வித்தாள்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தயாரிக்கின்றனர். தற்போது சமச்சீர் கல்வி முறையும், முப்பருவ முறையும் உள்ளது. 10மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான கேள்வித்தாள்கள் மட்டுமே அரசு தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் அச்சிட்டு வழங்கப்படும். பருவ தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை கடந்த ஆண்டு முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககமே வல்லுனர் குழுவை கொண்டு தயாரித்தது. 

அனைத்து வகை பள்ளிகளுக்கும் இந்த கேள்வித்தாள் அடிப்படையில் பருவமுறைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் 10 அல்லது 12ம் தேதியில், முதல் பருவ தேர்வு தொடங்க வேண்டும். அதனால் அதற்கான கேள்வித்தாள்களை வடிவமைக்கும் பணியை தேர்வுத் துறை இப்போதே தொடங்கிவிட்டது. இதற்காக சிறப்பு ஆசிரியர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment